உச்ச நட்சித்திரம் - ரஜினி

 கர்நாடகத்தில் பிறந்த காவிரியாய்

தமிழகம் வந்த கலைகாவிரியே

தம்பிக்கு எந்த ஊரென்பவற்கு

மனிதனென்று கர்ஜனை செய்தாய்

அபூர்வ ராகங்களாய்த் தோன்றி

தமிழ் சினிமாவில் அடிவைத்தாய்

வில்லனாய் கட்சியில் தோன்றினாலும்

வித்தைகள் பல காட்டினாய்

இளமை ஊஞ்சலாடும் வயதில்

பதினாறு வயதினிலே என்றாய்

முள்ளும் மலருமென சொல்லி

தாய்மீது சத்தியம் என்றாய்

நினைத்தாலே இனிக்கும் படங்களை

மக்களுக்கு விருந்து படைத்தாய்

நான் வாழவைப்பேன் என்று

தர்மயுத்தம் நடத்திக் காட்டினாய்

அன்புக்கு நான் அடிமையென

அன்னை ஒரு ஆலையமானாய்

பில்லாவாய் மாறி பொல்லாதவனாய்

போக்கிரி ராஜாவாய் திரிந்தாய்

வடிவாசலுக்கு அடங்காமல் சீரும்

முரட்டுக் காளையாய் பாய்ந்தாய்

சிவப்புச் சூரியனாய் மாறியே

நெற்றிக் கண் திறந்தாய்

தங்க மகனாக நீயும்

தாய் வீடு வந்தாய்

நான் அடிமை இல்லையென

விடுதலை முழக்கம் இட்டாய்

மாவீரன் நான்தான் என்று

தனிக்காட்டு ராஜாவாய் நின்றாய்

படிக்காதவன் என்றாலும் நீ

வேலைக்காரனென நிரூபித்துக் காட்டினாய்

தர்மத்தின் தலைவனாய் மாறி

அதிசய பிறவி ஆனாய்

திரையுலகில் மன்னனாக பேரெடுத்தும்

உழைப்பாளியாகவே வலம் வந்தாய்

அண்ணாமலையாக தோன்றி மக்களை

கிரிவலமாக சுற்ற வைத்தாய்

சிவாஜி என்ற இமாலயத்தை

படையப்பாவில் உயர்த்திக் காட்டினாய்

நவீன யுகத்தின் போக்குக்கேற்ப

எந்திரனாய் எழுச்சி பெற்றாய்

பாட்ஸாவில் கெத்து காட்டி

இதுயெங்க பேட்ட என்றாய்

ஆறிலிருந்து அறுபது வரையிலும்

எல்லோர் உள்ளத்திலும் முத்தானாய்  

Comments