தண்ணீர்


தாகத்தைத் தீர்க்கவே
தரையிறங்கி வந்ததோ
உயிரினங்கள் வளர்க்கவே
ஊற்றாக வந்ததோ
காடுகள் செழிக்கவே
காட்டாறாய் வந்ததோ
ஆலைகள் வந்ததால்
அழுக்காகிப் போனதோ
குடியிருப்பு வந்ததால்
குளங்கள் போனதோ
ஆழ்துளை வந்ததால்
ஆழமாகிப் போனதோ
பாட்டிலில் வந்ததால்
படுகையது போனதோ
மரமதை வைப்பதால்
மழைவளம் பெருகுமே
குளங்களை வெட்டுவதால்
குடிநீரும் கிடைக்குமே
ஆக்கிரமிப்பை அகற்றினால்
ஆற்றுப்படுகை விரியுமே
ஏரியினைத் தூர்வாரினால்
ஏராளநீர் நிறையுமே
நீர் மேலாண்மையால்
நிலத்தடிநீரும் ஊருமே

Comments