புகையிலையைத் தவிர்ப்போமே

பற்றி இழுக்கையில்
பறக்கத்தான் தோணுமே
பதற்றங்கள் தொலைந்ததுபோல்
படமது ஓடுமே
பஞ்சது அழிகையில்
புற்றது வளருமே
பாசமான குடும்பமது
பரிதவித்து நிற்குமே
பாதுகாப்பை உறுதிசெய்ய
புகையிலையைத் தவிர்ப்போமே

Comments