உறுதிமொழி

அகிலமே வெறுத்தாலும்
அடைகாக்க நானுண்டு
அன்னையின் உறுதிமொழி

தயங்காமல் முன்னேறு
தடுமாறினால் நானிருக்கிறேன்
தந்தையின் உறுதிமொழி

துன்பமது நேர்ந்தாலும்
துணையாக நானிருக்கிறேன்
துணையின் உறுதிமொழி 

ஆன்றோர் அவையில்
ஆற்றல் புரியசெய்வேன்
ஆசிரியர் உறுதிமொழி 

நம்பிக்கை இழக்கையில்
நானிருக்கிறேன் என்பது
நண்பனின் உறுதிமொழி 

Comments