வாக்குமூலம்

இழைக்காத குற்றத்திற்காக
சுற்றஞ்சூழவே நிற்கவைத்து
நீருற்றிக் கேட்கிறார்கள்
வாக்குமூலம் தாவென
இனி ஒப்புதலொன்றே
வழங்க வேண்டிய
கட்டாயத்திற்கு உட்படுத்தப்பட்டு
இசைவாய் தலையசைத்து
தன்னிறுதி முடிவுரைக்கிறது
அவ்வாடு

Comments