பிரிவுபடுத்தாதே


பாகுபாடு பார்த்துவிட்டு
பகலவனும் உதிக்காதே
தீண்டாதே என்றுரைத்து
தென்றலும் வீசாதே
விலகிடு என்றுரைத்து
வான்மழையும் பொழியாதே
நெருங்காதே என்றுரைத்து
நெல்மணியும் சொல்லாதே
சேராது என்றுரைத்து
செங்குருதியும் சொல்லாதே
பகுத்தறிவு கொண்டிருந்தால்
பாழும்மனிதம் வீழாதே
இயற்கையும் பிரிவுபார்த்தால்
இவ்வுலகம் இயங்காதே

Comments