அடிமைத்தனம் போக்கி
அடைந்த இவ்விடுதலையை
குருதியைக் கொடுத்த
கிடைத்த இவ்விடுதலையை
போராட்டத்தின் மூலமாக
பெற்ற இவ்விடுதலையை
பல்லுயிர் தியாகத்தால்
பரிசான இவ்விடுதலையை
நிறம்பேத காணாது
நாமடைந்த இவ்விடுதலையை
நல்லவற்றைப் போற்றி
நாள்தோறும் வளர்ப்போம்
நம்பிக்கையுடன் போராடி
நாட்டையினி உயர்த்துவோம்
நேர்மையின் கரத்தோடு
நாமினி பயணிப்போம்
நாமனைவரும் ஒற்றுமையாய்
நாட்டினில் வலம்வருவோம்
நாட்டிலுள்ள இயற்கையை
நலமுடனே பாதுகாப்போம்
வாழ்க நாடு! வளர்க குடி!
Comments
Post a Comment