இணைவோமா?

இருகரம் பிடித்தே
இயல்பாக நடந்தோமே
இணைப்பிரியா அன்றிலாய்
இருமனம் இணைந்தோமே
இமைக்கும் நொடியையும்
இன்பமாய்க் களித்தோமே
இடறியச் சொற்களினால்
இடைவெளியைத் தொடர்ந்தோமே
இம்மியளவு விரிசலது
இமயமாய்த் தோன்றியதுமே
இதயமெடுத்துச் சென்றாயே
இனிமீண்டும் இணைவோமா?

Comments