கல்யாணம்


தேக்கி வைச்ச காதலோடு
தேதி ஒன்னு குறிச்சுபுட்டேன்
பாக்கு வெத்தலை மாத்திதானே
பந்தல் கால நட்டிருவோம்
தாய்மாமன் வீட்டில் தானே
தலைகறி விருந்து நடக்கும்
பட்டுச் சேலை எடுக்கத்தானே
படையெடுத்து பெண்கள் நிற்கும்
நாளு வைக்க அக்காமாரு
நாளுந்தானே வந்து போகும்
பந்தல தெருவுல போட்டு
பாட்டு சத்தமா வப்போம்
பொண்ணு மாப்பிளைப் படத்தைவிட
பெரிசா நண்பர்கள் படபோடும்
தாலிகட்டி முடிஞ்ச உடனே
தலைவாழையில விருந்து வைப்போம்
முட்டிவலிக்க விழுந்து கும்பிட்டு
மூத்தவங்களுக்கு மரியாதை செய்வோம்
சம்மதத்த சீக்கிரம் சொல்லு
சட்டுன்னுதான் கல்யாணம் வைப்போம்