மகளிர் தினம்

கருவினில் ஏந்தியே
உருவினைக் கொடுத்து
உலகினில் நம்மை
உலவவிட்ட தாயவள்
இருகரம் பிடித்தே
இருவரும் நடக்க
இல்வாழ்வில் வந்த
நல்லாள் இல்லாலவள்   
தோழமைக்  கொடுத்தே
தோழியாய் மாறிடும்
தன்தாய் வயிற்றினிலே
தோன்றிய தமக்கையவள்
தாயாக மாறியே
தன்மடி சாய்தே
கவலையினைக் களையும்
கனிவான சேயவள்