நீ... நான்...

நிழலாக நீ
நிலமாக நான்
முழுமதியாய் நீ
முகிலாக நான்
கரையாக நீ
கடலலையாக நான்
மலராக நீ
மாருதமாக நான்
மழலையாக நீ
மொழியாக நான்
இசையாக நீ
இசைப்பவனாக நான்
கவிதையாக நீ
கவிஞனாக நான்