முதுமை காதல்

கட்டழகு மேனியோ
கலையிழந்து போனாலும்
கார்குழல் வண்ணத்தில்
கருமையது நீங்கினாலும்
கால்களின் வேகமது
கடுகுபோல் சிறுத்தாலும்
கண்பார்வை சற்றே
களக்கமது கொண்டாலும்
கவனிக்காது உறவுகள்
கழட்டிவிட்டுச் சென்றாலும்
காதலித்த நெஞ்மது
கடைசிவரை கைபிடிக்கும்

Comments