வெற்றியும் கடந்து போகும்

சான்றோர் சூழ்சபையில் சாதித்தவனென சூளுரைக்க, சான்றிதழ் வழங்கினார் சிறப்பு விருந்தினர்,
அரங்கம் அதிர்ந்த கைத்தட்டலால் குளமாக மாறிய கண்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டின கால்சட்டையிலிருந்த கைக்குட்டை ,
நிகழ்வுகளைப் படமாக்கும் புகைப்படத்திற்கு புன்னகை தவழவிட்டு, கூட்டத்திலிருந்து மீண்டு வந்தேன் இல்லத்திற்கு,
ஆனந்தத்தால் அயர்ந்த எனக்கு அடைக்கலம் அளித்தது நாற்காலி, மெல்ல கண்ணயர்ந்து நிகழ்வுகளை அசைபோட பெருமிதத்தில் ஆனந்த பெருமூச்சிரைத்தது,
அசரீரியைப் போல் அலைப்பேசியின் அழைப்பு மணி சிணுங்க, நண்பன் வாழ்த்து கூறி வினா எழுப்பினான் " அடுத்தது என்ன" என்று.

Comments