அந்திசாயும் நேரம்
ஆதவனும் ஓய்வெடுக்க
அலுவலகப் பணியிலிருந்து
அசதியாய் நீவந்ததும்
அடுக்களையில் தேநீருற்றி
அருகிலமர்ந்து கொடுக்க
அதைப் பருகியவுடன்
அலட்சியமாய் சென்றுவிட்டாய்
ஆறுதலாக பேசவில்லை
அனைவருக்கும் இரவுணவை
அன்பாக தயாரித்தப்பின்
அமைதியாக உண்டபின்னே
அருகருகே படுத்திருந்தும்
அமைதியான இரவோ
அசைவற்று நகர்ந்திடவே
ஆரம்ப காலங்களில்
அன்பாகப் பேசி
அரவணைக்கும் முத்தம்
அழகிய வீடு
அதிலொரு வாழ்வு
அழகிய கனவுகளில்
அந்தநாள் நினைவுகளை
அசைப்போட்டப்படி இரவுந்நகர
அறியாமலே புன்னகைத்தேன்
அலைப்பேசியின் அழைப்புமணி
அலறிக் கொண்டிருக்க
ஆதவனின் அலைகற்றை
அறை நிரம்பியிருக்க
அவசரமாய் ஓடினேன்
அடுக்களை நோக்கி
ஆங்கே துயில்கொண்டிருந்தது
அழகிய நம் கனவுகளும்
Comments
Post a Comment