எண் பூட்டு

என்கண்கள் வழியாக
        என்மனதில் நுழைந்தவளே
எண்திசையும் திரிந்தயெந்தன்  
       எண்ணத்தைக் கவர்ந்தவளே
எல்லையிலா மனந்தனிலே
      எங்குந்தான் நிறைந்தவளே
எண்பூட்டு தனைக்கொண்டு
     என்னுயிரைப் பூட்டினாயே

Comments