இமைக்கா நொடிகள்

இதழில் புன்னகையேந்தி
இயல்பாய் நடக்கையிலே
இருவிழியெனும் வாளால்
இரக்கமின்றி எனைதாக்கியதால்
இடறிய மனதும்
இவள் என்னவளேயென
இருமாப்பு கொண்டெனது
இருவிழியும் நெடுநேரம்
இமைக்க மறந்தனவே

Comments