சந்திப்பு

சிகை அலங்கரித்த
சிலையைப் போல
சிறிதும் சலனமின்றி
சிறுதவிப்புடன் நின்றவள்
சட்டெனத் தலைநிமிர்த்தி
சந்திரனைக் கண்டவுடன்
சிறுபுள்ளிமான் போல்
சலங்கைகள் துள்ள
சந்தனத் தோட்டத்திலவனை
சந்திக்கும் நாளதுவேயென
சிந்தும் புன்னகையோடு
சடுதியில் விரைந்தாள்

Comments