நீ நான் காதல்

விஞ்சியே நீ முறைக்க
கெஞ்சியே நான் நிற்க
மெளனமாய் நீ இருக்க
மெல்லமாய் நான் உரைக்க
பகலவனாய் நீ கொதிக்க
பனிக்கூழாய் நான் உருக
கானலாய் நீ கரைய
கவலையாய் நான் திரிய
நில்லாமல் நீ செல்ல
நிற்கிறேன் நான் காதலுடன்

Comments