விடுதலைத் திருநாள்

விடுதலைக்காக மண்ணில்
விதைக்கப்பட்டது விதைகளல்ல
வலிகளைத் துறந்து
வலிமையுடன் நின்று
வந்தே மாதரம்!
வந்தே மாதரம்! என்று
வீர முழக்கமிட்டு
வெள்ளையனை எதிர்த்து
விடுதலைக்குத் தன்னுயிர் தந்த
வீரத் திருமகன்களையும்
வீரத் திருமகள்களையும்...

வெவ்வேறு இனங்கள்
வெவ்வேறு மொழிகள்
வெவ்வேறு பண்பாடென
விரவி கிடந்தாலும்
வேற்றுமையுடன் ஒற்றுமையாய்
வென்று காட்டுவோம்...

விடுதலைக்குப் பாடுபட்ட
வீரர்களோடு தியாகிகளையும்
வணங்கி போற்றுவோம்
விடுதலையைப் பேணிக்காப்போம்

வந்தே மாதரம்! வந்தே மாதரம்!

Comments