இமையது நீங்கினால்
இருளதும் நீங்கிடும்
ஆயுதங்கள் நீங்கினால்
அழிவதும் நீங்கிடும்
சமயங்கள் நீங்கினால்
சாதியும் நீங்கிடும்
ஏற்றத்தாழ்வது நீங்கினால்
ஏழ்மையும் நீங்கிடும்
தற்பெருமை நீங்கினால்
தன்னலமும் நீங்கிடும்
சோம்பலது நீங்கினால்
சோதனையும் நீங்கிடும்
தோல்வியது நீங்கினால்
துயரமும் நீங்கிடும்
Comments
Post a Comment