காற்றின் போக்கு

உயிர்களின் வாழ்விற்கு
உயிர் சக்தியாகிறது
கருமேகத்தைத் தொட்டு
காரினைப் பொழிகிறது
கடுமையாய் உழைப்பவரது
களைப்பினை களைகிறது
மலரின் நறுமணத்தை
மணம் பரவச்செய்கிறது
சிறார்களின் பட்டந்தனை
சிறகடிக்கச் செய்கிறது
எண்வகை திசைகளிலும்
எக்கணமும் பயணிக்கிறது

Comments